;
Athirady Tamil News

குவியும் சுற்றுலா பயணிகள்: மனிதர்களால் உருவாக்கப்பட்ட உலகின் நெரிசலான தீவு

0

உலகில் மிகவும் நெரிசலான இடங்களில் ஒன்றாக கொலம்பியா கடற்பகுதியில் அமைந்துள்ள Santa Cruz del Islote என்ற மனிதர்களால் உருவாக்கப்பட்ட தீவு கருதப்படுகிறது.

அத்தோடு, அங்கு காவல்துறையினருக்கும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து குவிகின்றதாக கூறப்படுகிறது.

அதேவேளை, அந்த தீவில் நான்கு சாலைகள், வெறும் 45 குடும்பங்கள், மொத்தமாக 1,200 பேர்கள் வசிப்பதாகவும் 97 குடியிருப்புகளில் மொத்த மக்களும் வசிக்கின்றனர்.

கடுமையான விதிகள்
அங்குள்ள குடியிருப்புகள் எதுவும் பூட்டப்படுவதில்லை என்பதுடன், இதுவரை கொள்ளை சம்பவங்களோ குற்றச்செயல்களோ எதுவும் பதிவானதில்லை என்றும் தெரியவந்துள்ளது.

மேலும், அனைவருமே ஒருவகையில் உறவினர்கள் என்பதால், குற்றச்செயல்களுக்கு வாய்ப்பில்லை என்பதுடன் விசித்திரமானதும் கடுமையான விதிகளை பின்பற்றுவதாக கூறப்படுகிறது.

மீனவ மக்கள்
அத்துடன், இறப்பவர்களை அருகாமையில் உள்ள தீவு ஒன்றில் அடக்கம் செய்கின்றனர் எந்த குடியிருப்புக்கும் கழிவறை என்பதே இல்லை. சூரிய ஒளி மின்சாரத்தை நம்பியே இங்குள்ள மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், அங்கு மீனவ மக்கள் மட்டுமெ காணப்படுவதுடன், குடிநீருக்கும் குப்பைகளை அப்புறப்படுத்துவதற்கும் சிக்கல் இருப்பதாகவே கூறுகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.