;
Athirady Tamil News

வலுத்த எதிர்ப்புகள்; ‘Pure Veg Mode’ ஆடைக் கட்டுப்பாடு வாபஸ் – சொமேட்டோ அறிவிப்பு!

0

ஆடைக் கட்டுப்பாட்டை திரும்பப் பெறுவதாக சொமேட்டோ அறிவித்துள்ளது.

சொமேட்டோ உணவு டெலிவரி நிறுவனம் ‘Pure Veg Mode’ என்ற சேவையை அறிவித்தது. இது சைவ உணவு பிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

ஆனால், சமூகவலைதளங்களில் பச்சை நிற உடையுடனான சுத்த சைவ சேவைக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியது. தொடர்ந்து, பலர் சொமேட்டோ ஆப்பை அன் இன்ஸ்டல் செய்து அதன் ஸ்க்ரீன்ஷாட்டை பகிர்ந்திருந்தனர்.

சொமேட்டோ வாபஸ்
இந்நிலையில், பச்சை நிற உடையுடனான சுத்த சைவ சேவைக்கான பச்சை உடை பிரிவை வாபஸ் வாங்குவதாக சோமேட்டோ அறிவித்துள்ளது. இதுகுறித்து நிறுவனத்தின் சிஇஓ தீபீர்ந்தர் கோயல் எக்ஸ் பக்க பதிவில், “சுத்த சைவ உணவு விரும்பிகளுக்காக பிரத்யேக பிரதிநிதிகளை நாங்கள் பயன்படுத்தும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை.

ஆனால், அவர்களுக்கான ஆடைக் கட்டுப்பாடு வாபஸ் பெறப்படுகிறது. சொமேட்டோவின் அனைத்து டெலிவரி பிரதிநிதிகளும் ஒரே மாதிரியாக சிவப்பு நிற உடையே அணிவார்கள். அவர்கள் உணவு டெலிவரி செய்யும்போது ஆப்பில் தாங்கள் சுத்த சைவ டெலிவரி குழுவைச் சேர்ந்தவர்கள் என்பதை அடையாளப்படுத்தி இருப்பார்கள்.

ஆகையால் சைவ உணவு விரும்பிகள் அவர்கள் பிரத்யேக சைவ உணவு டெலிவரி பிரதிநிதி என்ற நம்பிக்கையைப் பெறலாம். இந்த இருவேறு நிற உடையால் சில குடியிருப்புவாசிகள் அவர்களது உரிமையாளர்களின் அதிருப்திக்கு உள்ளாகலாம் என்பது சுட்டிக்காட்டப்பட்டது.

அதை நாங்கள் புரிந்து கொண்டோம். எங்களால் யாருக்கும் சிக்கல் ஏற்படக்கூடாது. நாங்கள் எப்போதும் எவ்வித பெருமையும், தலைக்கனமும் இல்லாமல் பொதுமக்கள் கருத்துகளுக்கு செவிசாய்ப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.