;
Athirady Tamil News

ஹொங்கொங் நிறைவேற்றிய புதிய சட்டத்தால் மக்கள் அச்சம்!

0

ஹொங்கொங் நாடாளுமன்றம் மாறுபட்ட கருத்துக்கொண்டுள்ளவர்களை ஒடுக்குவதற்கு உதவக்கூடிய கடுமையான பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றியுள்ளமை அந்நாட்டு மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

ஹொங்கொங் நாடாளுமன்றம் புதிதாக நிறைவேற்றியுள்ள தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கிளர்ச்சி மற்றும் நாசவேலைகளில் ஈடுபடுபவர்களிற்கு ஆயுள் தண்டணையை விதிக்கலாம் என தெரிப்விக்கப்படுகின்றது.

உரிமைகள் மற்றும் சுதந்திரத்திற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும்
புதிய சட்டத்தின் கீழ் தேசத்துரோக குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இரண்டு முதல் ஏழு வரை ஒருவருக்கு சிறைத்தண்டனையை விதிக்க முடியும். வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ஒருவருக்கு பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனையை விதிக்கலாம்.

புதிய சட்டத்தின் கீழ் ஒருவரை 48 மணித்தியாலங்கள் முதல் இரண்டு வாரங்கள் வரை தடுத்துவைத்திருக்கலாம்.

ஹொங்கொங் நாடாளுமன்றம் குறிப்பிட்ட சட்டமூலத்தை மிக வேகமாக நிறைவேற்றியுள்ளது. அதேவேளை சீன சார்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை அதிகளவில் கொண்டுள்ள நாடாளுமன்றத்தில் பெரும்பாலானவர்கள் ஒடுக்குமுறை சட்டம் என வர்ணிக்கப்படும் இந்த சட்டத்திற்கு ஆதரவளித்துள்ளனர்.

ஹொங்கொங் நிறைவேற்றியுள்ள இந்த சட்டம் நகரின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்திற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதுடன் புதிய ஏதேச்சதிகார யுகத்தை உருவாக்கும் என விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இது மனிதஉரிமைகள் பாதுகாப்பு விடயத்தில் ஒரு பின்னோக்கிய நடவடிக்கை என ஐநாவின் மனித உரிமை ஆணையாளர் வோல்கெர் டேர்க் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.