;
Athirady Tamil News

மத்திய கிழக்கில் போர் பதற்றம்: சர்வதேச நாடுகள் விடுத்துள்ள எச்சரிக்கை!

0

கடந்த முதலாம் திகதி சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கவுள்ளதாக ஈரான் அறிவித்திருந்த நிலையில் சர்வதேச நாடுகளின் எச்சரிக்கைகள் வெளிவர ஆரம்பித்துள்ளன.

சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தைக் குறிவைத்து, கடந்த முதலாம் திகதி இஸ்ரேல் நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் ஈரானின் புரட்சி காவல்படையின் இரண்டு தளபதிகள் உடபட 12 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் பிரான்ஸ், இந்தியா, ரஷ்யா மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள், ஈரானில் உள்ள அதன் தூதரங்களின் செயற்பாடுகளை இடைநிறுத்துமாறு வலியுறுத்தியுள்ளதோடு ஈரானிய தாக்குதல் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், இஸ்ரேல், பாலஸ்தீனிய பிரதேசங்கள் மற்றும் சில பதற்றமான பிராந்தியங்களுக்கு பயணிக்க வேண்டாம் என்று தங்கள் நாட்டு குடிமக்களை எச்சரித்துள்ளன.

பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம்


சிரியா தலைநகரில் நடந்த தாக்குதலுக்கு எதிராக பதில் தாக்குதல் நடவடிக்கையை மேற்கொள்ளும் முகமாக ஈரான் அச்சுறுத்தியுள்ளது.

இரண்டு இராணுவ வீரர்களில் உட்பட ஏழு இஸ்லாமிய பாதுகாப்பு படை உறுப்பினர்களைக் கொன்றது, இது மத்திய கிழக்கில் வன்முறை அதிகரிக்கும் என்ற அச்சத்திற்கு வழிவகுத்துள்ளது.

இந்நிலையில் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“ஈரானைத் தளமாகக் கொண்ட இராஜதந்திரிகளின் உறவினர்கள் பிரான்ஸுக்கு திரும்புவார்கள் என்றும், பிரான்ஸ் அரசு ஊழியர்கள் இப்போது காசா உள்ளிட்ட பிரதேசங்களில் எந்தவொரு பணிகளையும் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது” என அமைச்சகம் கூறியுள்ளது.

பிரித்தானியா வெளியிட்டுள்ள அறிக்கை
இந்நிலையில் பிரித்தானியா வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரானில் இருந்து இஸ்ரேலியப் பகுதி மீது தாக்குதல் நடத்தும் சாத்தியம் காரணமாக இஸ்ரேல் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளுக்கு அத்தியாவசியப் பயணங்களைத் தவிர ஏனைய அனைத்தையும் தவிர்க்கவும்” என பிரித்தானியா தனது குடிமக்களிடம் கூறியுள்ளது.

மேலும், பாலஸ்தீனிய-இஸ்ரேல் மோதல் சூழலில், லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான ‘ப்ளூ லைன்’ பகுதியிலும் நிலைமை மோசமடைந்து உள்ளது” என ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கை


இதன்படி இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில்,”பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலையை” கருத்தில் கொண்டு மறு அறிவிப்பு வரும் வரை இந்தியர்கள் இரு நாடுகளுக்கும் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளிலும் இருக்கும் இந்திய குடிமக்கள் தங்கள் பாதுகாப்பு குறித்து மிகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் அவர்களின் நடமாட்டத்தை குறைந்தபட்சமாக கட்டுப்படுத்த வேண்டும் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.