;
Athirady Tamil News

அமெரிக்காவில் வேகமாக பரவிவரும் பறவைக்காய்ச்சல் ; எச்சரிக்கை விடுக்கும் WHO

0

H5N1 வைரஸ் பாதிக்கப்பட்ட கால்நடைகளிலிருந்து பெறப்படும் பாலில் H5N1 வைரஸ் அதிகமாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஜெனீவாவில் இடம்பெற்ற ஒரு ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயம் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிர்கொல்லியாக மாறும் H5N1 வைரஸ்
இதன்போது, உலக சுகாதார நிறுவனத்தின் உலகளாவிய காய்ச்சல் திட்டத்தின் தலைவர் வென்கிங் ஜாங் பேசுகையில், “H5N1 என்ற பறவைக்காய்ச்சலானது பறவைகளிடமிருந்து, தற்பொழுது ஆடு மாடு போன்ற கால்நடைகளுக்கு பரவியுள்ளது.

இந்த நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளிலிருந்து பெறப்படும் பாலில் இந்தவகை வைரஸ் அதிக அளவு இருக்கிறது” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வைரஸ் தொற்றானது அமெரிக்காவில் அதிகமாக பரவி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பழுப்பு நிற ஸ்குவாக்கள் உயிரிழப்பு இதற்கு முன்னதாக தெற்கு அட்லாண்டிக் கடற்கரையின் ஜார்ஜியா தீவில் பல பழுப்பு நிற ஸ்குவாக்கள் (brown skuas) இறந்ததை அடுத்து, அதனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் H5N1 என்ற பறவைக்காய்ச்சலால் அவை இறந்ததாக உறுதிசெய்தனர்.

கொவிட் தொற்றை விட 100 மடங்கு மோசமானது H5N1 வைரஸ் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளளனர்.

இதனால் பாதிப்புக்கு உள்ளானோர் பலியாகும் அபாயம் இருப்பதாகவும் சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.