;
Athirady Tamil News

எதிர்ப்புக்கு மத்தியில் ஈரான் அதிபரின் இலங்கை விஜயம்: வெளியான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

0

ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசி(Ebrahim Raisi) இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது குறித்து அரசாங்க தகவல் திணைக்களம் தகவலொன்றை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் இப்ராஹிம் ரைசி நாளை மறுதினம்(24) இலங்கைக்கு வரவுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

ஈரானின் 529 மில்லியன் டொலர் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக கையளிக்கும் நிகழ்வில் பங்கேற்பதற்காக அவர் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானிய அதிபர்
இந்த நிகழ்வின் ஏற்பாடுகள் தொடர்பிலான கலந்துரையாடலொன்று இன்றைய தினம்(22) உமா ஓயா மின் நிலைய வளாகத்தில் இடம்பெற்றது.

மேலும் குறித்த கலந்துரையாடலில் நீர்ப்பாசன அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, இலங்கைக்கான ஈரானிய தூதுவர், ஈரானிய அதிபரின் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் திட்ட நிர்மாண நிறுவனத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.