;
Athirady Tamil News

பிரபல உணவகத்தில் ரூ.34,000-க்குச் சாப்பிட்டு பில் – நூதனமாக ஏமாற்றி ஓடிய குடும்பம்!

0

பிரபல ஹோட்டலில் ஒரு குடும்பம் 34,000 ரூபாய்க்கு சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டுச் சென்றனர்.

ரூ.34,000 சாப்பிட்டு பில்
இங்கிலாந்தில் பிரபல உணவகம் ஒன்றில் 8 பேர் கொண்ட குடும்பமொன்று சாப்பிட வந்துள்ளனர். அப்போது ஒரு பிடி பிடித்த அந்த குடும்பம் 34,000 ரூபாய்க்கு சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் நூதனமான முறையில் ஏமாற்றிச் சென்ற சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த குடும்பத்தில் ஒரு பெண் இரண்டு முறை தனது வங்கிக் கணக்கு அட்டை வைத்து பணம் செலுத்துவது போல் நடித்து பிறகு வேறு ஒரு அட்டையை எடுத்துவருவதாக தன் மகனை பணம் செலுத்துமிடத்தில் நிற்கவைத்துவிட்டு வெளியே சென்றுவிட்டார். பின்னர் அவரது மகனுக்கு போன் செய்து அங்கிருந்து கிளம்பச் சொல்லி ஏமாற்றியிருக்கிறார்.

இந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட உணவகம் தனது இணையத்தள பக்கத்தில் சாப்பிட்டு ஏமாற்றிய குடும்பத்தின் புகைப்படத்தை பதிவிட்டு நடந்த அணைத்ததையும் விளக்கியது. அதில், `ஹோட்டலில் ஒரு குடும்பம் 329 பவுண்ட் (சுமார் ரூ.34,000) பில் செலுத்தாமல் சென்றது கேவலமான செயல்.

ஏமாற்றி ஓடிய குடும்பம்
அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தன்னுடைய வங்கிக் கணக்கு அட்டை இரண்டு முறை நிராகரிக்கப்பட்ட பிறகு, வேறு ஒரு அட்டையை எடுத்து வருவதாகவும், அதுவரை தன் மகன் இங்கேயே இருப்பார் என்று சொல்லிவிட்டுச் சென்றார். ஆனால், அவர் வரவேயில்லை. அடுத்த சில நிமிடங்களில் அந்தச் சிறுவனுக்கு செல்போனில் அழைப்பு வந்தது.

அந்த அழைப்பில், அங்கிருந்து ஓடிச்செல்லுமாறு சிறுவனிடம் சொல்லப்படுகிறது.அவர்கள் முன்பதிவு செய்ய பயன்படுத்திய நம்பரும் போலியானது என்பதால், போலீஸில் புகாரளிப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. இதுபோன்ற செயலை யாரிடம் செய்தாலும் அது கேவலமானது.

அதுவும் புதிதாகத் திறக்கப்பட்ட ஹோட்டலில் இவ்வாறு செய்வது இன்னும் மோசமானது’ இவ்வாறு குறிப்பிட்டிருந்தது . இதை பார்த்த நெட்டிசன்கள் பலர் அந்த உணவகத்திற்கு ஆதரவாக கமன்ட்கள் பதிவிட்டு வருகின்றனர். ஒரு சிலர், அவர்களின் புகைப்படத்தை ஒவ்வொரு ஹோட்டலிலும் ஒட்ட வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

அதேபோல் மற்ற சிலர், அவர்கள் உங்களுக்குச் சிறந்த விளம்பரத்தைச் செய்திருக்கின்றனர். இப்போது நீங்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்களின் ரேடாரில் இருக்கிறீர்கள் உங்களின் ஹோட்டலும் அற்புதமாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.