;
Athirady Tamil News

கொழும்பில் தேடப்படும் தமிழர் – தகவல் கொடுத்தல் இரண்டு மில்லியன் சன்மானம்

0

கொழும்பில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய நபர் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

தெமட்டகொடை பிரதேசத்தைச் சேர்ந்த ஜெராட் புஸ்பராஜா ஒஸ்மன் ஜெராட் என்பவர் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

1978 ஆம் ஆண்டு பிறந்த சந்தேக நபர் 5 அடி 6 அங்குலம் உயரம் உடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மக்களிடம் உதவி கோரும் பொலிஸார்
அவரின் புகைப்படத்தை வெளியிட்டு மக்களின் உதவி நாடப்பட்டுள்ளது.

சந்தேக நபர் தொடர்பான தகவல்கள் வழங்குவோருக்கு இரண்டு மில்லியன் ரூபா சன்மானம் வழங்கப்படும்.

தகவல்கள் தருவோரின் பெயர்கள் இரகசியமாக பாதுகாக்கபடும் என பொலிஸார் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்பான தகவல் தெரிந்தால் 071-8591753 அல்லது 071-8591774 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.