;
Athirady Tamil News

இந்தியாவில் பயங்கர சம்பவம்… 12 குழந்தைகள் உட்பட 27 பேர் பரிதபமாக உயிரிழப்பு!

0

இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் உள்ள நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இதுவரையில் 27 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் 12 சிறுவர்களும் அடங்குவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த தீ விபத்து ராஜ்கோட் நகரில் உள்ள விளையாட்டு அரங்கில் ஏற்பட்டது.

தீயில் சிக்கி உயிரிழந்த பலரது உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு எரிந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை தீயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்பட நிலையில் விசாரணை நடத்த 5 பேர் கொண்ட விசேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.