;
Athirady Tamil News

பங்களாதேஷில் இந்து கோயில்கள் மீது மீண்டும் தாக்குல்கள் : தொடரும் சர்ச்சை

0

பங்களாதேஷில் செயற்படும், தீவிரவாத குழுக்கள் சிட்டகொங்கில் இரண்டு கோயில்களைத் தாக்கியுள்ளதுடன் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியதியுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனையடுத்து, குறித்த பகுதியில் வசிக்கும் இந்துக்கள் பாதுகாப்பான தங்குமிடங்களை நோக்கி வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இன்று பகல் சிட்டகொங்கில் உள்ள கோட்வாலி காவல் நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள சில வியாபாரத்தளங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்துக் கோயில்கள்
இந்து சமய அமைப்பான இஸ்கானை தடை செய்யக் கோரி, பேரணி நடந்து கொண்டிருந்த போதே இந்த சம்பவம் நடந்துள்ளது.

எனினும், இந்த சம்பவத்தின்போது காவல்துறையினரும் இராணுவத்தினரும் எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசாங்கம் கடந்த ஒகஸ்ட் மாதம் வீழ்ந்ததில் இருந்து பங்களாதேஷில் இந்துக் கோயில்கள் மற்றும் தெய்வங்களை இழிவுபடுத்துதல் மற்றும் சேதப்படுத்துதல் போன்ற சம்பவங்கள் தொடர்கின்றன.

இதுவரை 200இற்கும் மேற்பட்ட கோயில்கள் குறிவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடிப்படைவாத அமைப்பு
சின்மோய் கிருஸ்ண தாஸ் என்ற இந்து மதத் துறவி தேசத்துரோக குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன், இஸ்கான் என்ற இந்து அமைப்பை தடை செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மத அடிப்படைவாத அமைப்பு என்று கூறியே, அந்த அமைப்புக்கு தடை விதிக்க கோரப்பட்டுள்ளது.

இந்தநிலையில், பங்களாதேஷில் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் மீதான அச்சுறுத்தல்கள் மற்றும் தாக்குதல்களை இந்திய அரசாங்கம் வன்மையாக கண்டித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.