கடற்படையைச் சேர்ந்த பலருக்கு பதவி உயர்வு
கடற்படையைச் சேர்ந்த பலருக்கு பதவி உயர்வு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக் கடற்படை (Sri Lanka Navy) இன்றைய தினம் (09) 74ஆம் ஆண்டு நிறைவை கொண்டாடும் நிலையில் இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட உள்ளன.
கடற்படையைச் சேர்ந்த பல்வேறு பதவி நிலைகளை வகிக்கும் 2138 பேருக்கு பதவி உயர் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் பிரியந்த பெரேராவின் பரிந்துரைக்கு அமைய இந்த பதவி உயர்வு வழங்கப்படுகின்றது.
மேலும், கடற்படை ஆரம்பிக்கப்பட்டு 74 ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.