;
Athirady Tamil News

உக்ரைன் வங்கி ஊழியர்களை வெளியேற்றும் ஹங்கேரி: இரு நாடுகளிடையே முற்றிய மோதல்

0

சுமார் 80 மில்லியன் டொலர் பணம் மற்றும் 9 கிலோ தங்கத்தை வாகனங்களில் கொண்டு சென்ற உக்ரைன் வங்கி ஊழியர்கள் ஏழு பேரை ஹங்கேரி அரசு அதிரடியாகக் கைது செய்து, அவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற உத்தரவிட்டுள்ளது.

பணமோசடி சந்தேகத்தின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஹங்கேரி வரி ஆணைக்குழு தெரிவித்துள்ள நிலையில், இது முறையான வங்கிப் பரிமாற்றம் என்றும், ஹங்கேரி அரசு, “அரசு ரீதியிலான வழிப்பறியில்” (State Banditry) ஈடுபடுவதாகவும் உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா கடுமையாகச் சாடியுள்ளார்.

ஐரோப்பிய ஆணைக்குழு
அடுத்த மாதம் ஹங்கேரியில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் விக்டர் ஓர்பன் தனது அரசியல் ஆதாயத்திற்காக யுக்ரைனைச் சிக்க வைப்பதாக உக்ரைன் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.

மறுபுறம், உக்ரைன் வழியாக வரும் ரஷ்ய எண்ணெய் விநியோகத்தை உக்ரைன் நிறுத்தியுள்ளதாகக் கூறி, ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பன் யுக்ரைனுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் 90 பில்லியன் யூரோ நிதியுதவியைத் தடுத்து நிறுத்தியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, ரஷ்ய எண்ணெய்க்காக யுக்ரைனை ஓர்பன் மிரட்டுவதாகக் குறிப்பிட்டதோடு, நிதியுதவியைத் தடுத்தால் உக்ரைன் ராணுவம் அவர் மீது நடவடிக்கை எடுக்கும் என்ற தொனியில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த கடுமையான வார்த்தைப் போர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இரு நாடுகளும் பதற்றத்தைத் தணித்துக்கொள்ள வேண்டும் என்று ஐரோப்பிய ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.