;
Athirady Tamil News

புனித பத்று சஹாபாக்கள் நினைவு தின மணாகிப் மஜ்லிஸ் கொடியேற்ற நிகழ்வு

0

தாறுஸ்ஸபா அமையத்தின் வருடாந்த புனித பத்று சஹாபாக்கள் நினைவு தின மணாகிப் மஜ்லிஸ் கொடியேற்ற நிகழ்வு

கல்முனை தாறுஸ்ஸபா அமையத்தின் ஏற்பாட்டில் வருடாந்தம் இடம்பெறும் புனித பத்று சஹாபாக்கள் நினைவு தின மணாகிப் மஜ்லிஸ் கொடியேற்ற நிகழ்வும் வருடாந்த இப்தார் வைபவமும் தாறுஸ்ஸபா அமைய பிரதானி மௌலவி உஸ்தாத் ஏ.ஆர். சபா முஹம்மத் தலைமையில் தாறுஸ்ஸபா அமைய தலைமையகத்தில் இன்று இடம்பெற்றது

ஹிஜ்ரி 1447 றமழான் 17 – 2026 மார்ச் 07 சனிக்கிழமை மாலை இடம்பெற்ற இந்நிகழ்வில் புனித பத்று சஹாபாக்கள் நினைவு தின மணாகிப் மஜ்லிசினை தொடந்து கொடியேற்றப்பட்டதுடன் வருடாந்த இப்தார் வைபவமும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் உலமாக்கள், முன்னாள் உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், பிரதேச அமைப்புக்களின் பிரதிநிதிகள், கல்முனை தாறுஸ்ஸபா அமையத்தின் நிர்வாகிகள், கலை,அரசியல், இலக்கிய, ஊடகத்துறை சார்ந்தவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

      

You might also like

Leave A Reply

Your email address will not be published.