யாழ் மத்திய கல்லூரியும் சென்ஜோன்ஸ் கல்லூரியும் இடையில் 119வது ஆண்டாக நடைபெற்ற வடக்கின் போர் என அழைக்கப்படும் மாபெரும் கிரிக்கெட் போட்டியில் யாழ் மத்திய கல்லூரி வெற்றி பெற்றது.
யாழ்.மத்திய கல்லூரியில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான போட்டி மூன்றாவது நாளாக இன்றைய தினம் சனிக்கிழமையும் இடம்பெற்றது. அதில் மூன்று இலக்குகளால் மத்திய கல்லூரி வெற்றி பெற்றது.
சென்ஜோன்ஸ்கல்லூரி முதல் இனிங்ஸில் 119 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மத்திய கல்லூரி அணி 95 ஆட்டங்களுடன் சகல இலக்குகளையும் இழந்தது.
மீண்டும் இரண்டாம் இனிங்ஸை ஆரம்பித்த சென்ஜோன்ஸ்கல்லூரி அணி 223 ஓட்டங்களுக்கு சகல இலக்குகளையும் இழந்தன. 248 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் தனது இரண்டாவது இனிங்ஸை ஆரம்பித்த மத்திய கல்லூரி அணி 7 இலக்குகளை மாத்திரம் இழந்து, 250 ஓட்டங்களை பெற்று, 3 இலக்குகளால் வெற்றி பெற்றது.