பிரித்தானிய நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக இந்திய வம்சாவளி நபரை பரிந்துரைத்த ஸ்டார்மர்
பிரித்தானிய நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக இந்திய வம்சாவளினர் ஒருவரை பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பரிந்துரைத்துள்ளார்.
பிரித்தானிய பிரதமர் கியர் ஸ்டார்மர், தொழிலாளர் கட்சியின் இந்தியர்கள் பிரிவு (Labour Indians) தலைவராக செயல்படும் லண்டன் நகரைச் சேர்ந்த கிரிஷ் ராவலை பிரித்தானிய நாடாளுமன்றத்தின் மேல் அவையான House of Lords-க்கு புதிய அரசியல் உறுப்பினராக பரிந்துரைத்துள்ளார்.
2018-ல் மறைந்த பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபெத் வழங்கிய OBE (Order of the British Empire) விருதை பெற்ற கிரிஷ் ராவல், Faith in Leadership அமைப்பின் நிறுவனர் மற்றும் இயக்குனராக உள்ளார்.
இந்த அமைப்பு, ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு மத நல்லிணக்கத்தைக் கூட்டுவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
பிரதமர் கியர் ஸ்டார்மர் பரிந்துரை செய்த 30 புதிய பேரில் கிரிஷ் ராவல் ஒருவர்.
இந்த பரிந்துரைகளை முன்மொழிய, House of Lords Appointments Commission மூலம் சோதனை செய்யப்படும்.
அதன்பின், பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ல்ஸின் அனுமதி மூலம் கிரிஷ் ராவலுக்கு life peerage வழங்கப்படும்.
கிரிஷ் ராவலுடன் ஸ்டார்மரின் முன்னாள் தலைமைச் செயலாளர் சூ கிரே மற்றும் இலங்கை வம்சாவளியைக் கொண்ட Thangam Debbonnaire போன்ற தொழிலாளர் கட்சியின் முக்கிய உறுப்பினர்களும் House of Lords-ல் சேர வாய்ப்பு பெற்றுள்ளனர்.
