;
Athirady Tamil News

போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை; ஈரான் திட்டவட்டம்!

0

அமெரிக்காவும் இஸ்ரேலும் தம் மீது தாக்குதல் தொடுக்கும்வரை போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என ஈரான் நேற்று (09) தெரிவித்துள்ளது.

மோதலின் ஆரம்பத்தில் ஈரான் பேச்சுவார்த்தையை நாடிய போதிலும் ஈரான் போரை ஆரம்பிக்கவில்லை என ஈரானிய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் எஸ்மாயில் பக்ஹாயி ( Esmaeil Baghaei) தெரிவித்துள்ளார்.

நாங்கள் இந்த போரை ஆரம்பிக்கவில்லை
இந்நிலையில் 11ஆவது நாளாக இராணுவ ஆக்கிரமிப்பைக் கொண்ட அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதல் தொடர்கிறது. நாங்கள் இந்த போரை ஆரம்பிக்கவில்லை என தெரிவித்த ஈரானிய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ( Esmaeil Baghaei) ,

இராணுவ ஆக்கிரமிப்பு இடம்பெறுகிறது. பாதுகாப்பைத் தவிர வேறு எதைப் பற்றியும் பேச முடியாது. தற்போதைய நிலையில், ஈரான் தன்னைத் தானே பாதுகாக்கும் செயற்பாட்டில் உள்ளது.

பிராந்திய பதற்ற நிலை எல்லைக் கடந்த சூழலில் அஜர்பைஜான், துருக்கி அல்லது சைப்ரஸ் மீது ஆளில்லா விமானம் அல்லது ஏவுகணைத் தாக்குதலை ஈரான் மேற்கொண்டுள்ளது.

நாங்கள், எந்த நாட்டின் மீதும் இராணுவ ஆக்கிரமிப்பை பிராந்தியத்தில் ஏற்படுத்தவில்லை. எங்கள் தரப்பிலிருந்து ஈரானுக்கு உள்ளேயோ அல்லது எங்கள் இராணுவ கட்டமைப்பிலிருந்தோ எவ்விதமான தாக்குதலும் மேற்கொள்ளப்படவில்லை.

அஜர்பைஜானின் குற்றச்சாட்டை ஈரான் மறுக்கிறது. அஜர்பைஜான், ஈரானின் ஆளில்லா விமானங்கள் நக்சிவன் பகுதியிலுள்ள விமான நிலைய முனையத்தையும் பாடசாலை கட்டிடத்தையும் பல பொதுமக்களையும் தாக்கியதாக குற்றஞ்சாட்டுகிறது என ஈரானிய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ( Esmaeil Baghaei) மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.