பிரபல பாடசாலையொன்றில் குளவி கொட்டுக்கு இலக்கான 20 மாணவர்கள்
கெகிராவ நகரில் உள்ள பிரபல பாடசாலையொன்றைச் சேர்ந்த மாணவர்கள் குழு ஒன்று குளவித் தாக்குதலுக்கு உள்ளாகி இன்று (10) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த குளவித் தாக்குதலில் சுமார் இருபது மாணவர்கள் குளவி கொட்டுக்க இழக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆம்புலன்ஸ் சேவை மற்றும் தனியார் வாகனங்களைப் பயன்படுத்தி மாணவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கிடையில், கெகிராவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் நிலை மோசமாக இல்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.