கனடாவில் முட்டைகளில் பாக்டீரியா தொற்று அபாயம்., திரும்ப பெற உத்தரவு

கனடாவில் சில வகை முட்டைகளில் சல்மொன்லா பாக்டீரியா தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
கனடாவின் உணவு ஆய்வாளர்கள் அமைப்பு (CFIA) சால்மொனெல்லா தொற்று அபாயம் காரணமாக ஆறு பிராண்டுகளின் முட்டைகளை திரும்ப பெற உத்தரவிட்டுள்ளது.
ஜனவரி 18 அன்று அறிவிக்கப்பட்ட இந்த உத்தரவு குறிப்பிட்ட தொகுப்பு எண்ணிக்கைகளைக் கொண்ட பாக்கெஜ்களை திரும்பப்பெறும்.
பாதிக்கப்பட்ட முட்டைகள் மற்றும் பிராண்டுகள்
தினசரி பயன்படுத்தப்படும் Golden Valley, Compliments, Foremost, IGA, No Name மற்றும் Western Family என்ற ஆறு பிராண்டுகளின் முட்டைகள்தான் திரும்ப பெறப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட முட்டைகளை சேகரிக்க வேண்டிய தொகுப்பு எண்ணிக்கைகள் CFIA இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவை பல்வேறு அளவுகளில் கிடைக்கும் முட்டைகளுக்காகும்.
அச்சுறுத்தல் மற்றும் நடவடிக்கைகள்
சால்மொனெல்லா தொற்றானது பொதுவாக கால்நடை மற்றும் மனித குடல்களில் காணப்படும் பாக்டீரியாகும்.
வயிற்று வலி, காய்ச்சல், வாந்தி, தலைவலி போன்றவை இதனால் ஏற்படும் உடல் பாதிப்புகள் ஆகும்.
பாதிக்கப்படுபவர்கள் பலர் சில நாட்களிலேயே குணமாகினாலும், ஒரு சிலர் நீண்ட கால உடல் நிலை சிக்கல்களுக்குப் போகக்கூடும்.
நுகர்வோருக்கான அறிவுறுத்தல்
பாதிக்கப்பட்ட முட்டைகளை உட்கொள்ளவோ அல்லது விற்கவோ கூடாது. அவற்றை குப்பையில் வீசலாம் அல்லது வாங்கிய இடத்திலேயே திரும்ப கொடுக்கலாம்.
தொற்றைத் தடுக்கப் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருந்தால் சால்மொனெல்லா அபாயத்தை தவிர்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.