மதநிந்தனைக் குற்றச்சாட்டு: பாகிஸ்தானில் 4 பேருக்கு மரண தண்டனை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் மதநிந்தனை குற்றச்சாட்டின் பேரில் 4 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
இது குறித்து மதநிந்தனைப் பிரிவு அரசுத் தரப்பு வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை கூறியதாவது:
நபிகள் நாயம் மற்றும் புனித நூலை நிந்திக்கும் வகையில் இணையதளத்தில் பதிவுகள் வெளியிட்டமைக்காக நான்கு இளைஞா்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவா்கள் அனைவரும் ராவல்பிண்டியைச் சோ்ந்தவா்கள் என்று அவா்கள் தெரிவித்தனா்.
பாகிஸ்தானில் இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தினால் அதற்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்க சட்டம் வழிவகை செய்கிறது. எனினும், அந்தக் குற்றச்சாட்டில் பேரில் இதுவரை யாரும் தூக்கிலிடப்பட்டதில்லை.
எனினும், தனிப்பட்ட பகையைத் தீா்ப்பதற்கும், சிறுபான்மையினரை குறிவைப்பதற்கும் அந்த சட்டப்பிரிவு ப குற்றம் சாட்டப்படுகிறது. அவ்வாறு குற்றச்சாட்டுக்குள்ளானவா்கள் மதவெறிக் கும்பலால் கொடூரமாக அடித்துக் கொல்லப்படும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன.