பள்ளி மாணவர்களை போர் ட்ரோன்கள் வடிவமைப்பில் ஈடுபடுத்தும் ரஷ்யா., பரபரப்பு தகவல்
ரஷ்யாவில் பள்ளி மாணவர்கள் போர் ட்ரோன்கள் வடிவமைப்பில் ஈடுபடுத்தபடுவதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனில் போர் தொடரும் நிலையில், ரஷ்யா இளம் மாணவர்களை (14-15 வயது) போர் ட்ரோன்கள் வடிவமைக்கும் பணியில் ஈடுபடுத்தி வருகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக அயல்நாட்டிற்கு தப்பிச்சென்ற ரஷ்ய ஊடகம் ‘The Insider’ நடத்திய விசாரணையில் இத்தகவல்கள் வெளியாகியுள்ளன.
2022-இல் அறிமுகமான Berloga எனும் குழந்தைகள் வீடியோ கேம் மூலம் ஆரம்பமாகும் இந்த பயிற்சி, மாணவர்களை ட்ரோன் வடிவமைப்பு, சோதனை போன்ற இராணுவ வேலைகளில் நேரடியாக ஈடுபடுத்துகிறது.
இது போன்ற போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்கள், பெரும் பாதுகாப்பு நிறுவனங்களில் நேரடி பணியிடம் பெறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
“நாங்கள் போர் தேவைக்காக வேலை செய்கிறோம் என்பதை வெளிப்படுத்த கூடாது” என்று மாணவர்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.
அதனால் அவர்கள் “இது சிவில் பயன்பாடுக்காக” என்ற பெயரில் திட்டங்களை முன்வைக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இந்த முயற்சிகள், ரஷ்ய ஜனாதிபதி புடின் அறிவித்துள்ள உள்நாட்டு ட்ரோன் உற்பத்தி திட்டத்துடன் ஒத்துப்போகின்றன.
மேலும், சில மாணவர்கள் ட்ரோன் தொழிற்சாலைகளுக்கே நேரடியாக நியமிக்கப்பட்டு, அதைச் சார்ந்த கல்லூரிகளில் படிக்க அனுப்பப்படுகிறார்கள்.
இந்த நடவடிக்கைகள், குழந்தைகளை போர் உற்பத்திக்கு பயன்படுத்தும் மோசமான முயற்சியாகக் கருதப்படுகிறது.