;
Athirady Tamil News

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரிவு பொதுச் செயலாளராக ஆதவ் அர்ஜூனா நியமனம்

0

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றிக் கழகத்தில் நேற்று இணைந்தார்.

தவெக-வில் இணைந்த ஆதவ் அர்ஜூனா
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் துணைப் பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜுனா அக்கட்சியில் இருந்து விலகிய நிலையில், இன்று விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.

இதேபோல், அதிமுக-வின் தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளராக இருந்த நிர்மல்குமார் தவெக-வில் இணைந்தார்.

சென்னை பனையூர் அலுவலகத்தில் தவெக. தலைவர் விஜய் முன்னிலையில் இணைப்பு நிகழ்வு நடைபெற்றது.

அப்போது, விஜய் முன்னிலையில் ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார் இருவரும் தவெக-வில் இணைந்தனர்.

இந்நிலையில், தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனாவுக்கு அக்கட்சியின் தேர்தல் பிரிவு பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து, அதிமுகவில் இருந்து வந்த சி.டி.ஆர்.நிர்மல்குமார், தவெகவின் துணை பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், பேச்சாளர் ராஜ்மோகன், தவெக-வின் கொள்கை பரப்பு செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.