;
Athirady Tamil News

கழிவறையில்… உயிரை மாய்த்துக்கொண்ட மாணவன்: தாயாரின் பகீர் குற்றச்சாட்டு

0

கேரளாவின் கொச்சியில் பள்ளி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சில வாரங்களுக்குப் பிறகு, கொடூரமான துன்புறுத்தல் தமது மகனை மரணத்தை நோக்கித் தள்ளியதாக அவனது தாயார் குற்றம் சாட்டியுள்ளார்.

தனது மகனின் மரணம்
தனது மகன் மிஹிர் அகமதுவை அடித்து துன்புறுத்தி, இழிவான வார்த்தைகளால் திட்டி, கழிப்பறை இருக்கையை நக்க கட்டாயப்படுத்தியதாக ராஜ்னா குற்றம் சாட்டியுள்ளார்.

தற்போது இந்த விவகாரத்தில் பொலிசார் தற்கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர், ஆனால் மிஹிரின் தாயார், தனது மகனின் மரணம் குறித்து உடனடி மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தக் கோரி முதல்வர் பினராயி விஜயன் அலுவலகத்திற்கும் கேரள காவல்துறைத் தலைவருக்கும் கடிதம் எழுதியதாகக் கூறியுள்ளார்.

ஜனவரி 15 ஆம் திகதி கொச்சி நகரின் திரிபுனிதாரா பகுதியில் உள்ள அவர்களது குடியிருப்பின் 26வது மாடியில் இருந்து குதித்து 15 வயதேயான மிஹிர் தற்கொலை செய்து கொண்டார்.

சிறுவன் மிஹிரின் மரணத்தை அடுத்து மிஹிர் ஏன் இவ்வளவு கடுமையான முடிவை எடுத்தார் என்பதைப் புரிந்துகொள்ள நானும் என் கணவரும் தகவல்களைச் சேகரிக்கத் தொடங்கினோம் என குறிப்பிட்டுள்ள ராஜ்னா,

அவரது நண்பர்கள், பள்ளித் தோழர்களுடனான உரையாடல்கள் மூலமாகவும், சமூக ஊடகச் செய்திகளைப் படிப்பதன் மூலமாகவும், அவர் அனுபவித்த கொடூரமான யதார்த்தத்தை நாங்கள் அறிந்து அதிர்ச்சியுற்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

கொடூரமான ராகிங்
மிஹிர் பள்ளியிலும் பள்ளி பேருந்திலும் ஒரு மாணவர் குழுவால் கொடூரமான ராகிங், கொடுமைப்படுத்துதல் மற்றும் உடல் ரீதியான தாக்குதலுக்கு ஆளானார் என்று ராஜ்னா வெளிப்படுத்தியுள்ளார்.

நாங்கள் சேகரித்த சான்றுகள் நெஞ்சை உறைய வைப்பதாக உள்ளது என குறிப்பிட்டுள்ள அந்த தாயார், மிஹிரை மிக மோசமாக தாக்கியுள்ளனர், இழிவான வார்த்தைகளால் திட்டியுள்ளர், நினைத்துப் பார்க்க முடியாத அவமானத்தைத் தாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என ராஜ்னா பதிவு செய்துள்ளார்.

மரணத்திற்கு பிறகும், அவர்கள் கொண்டாடியுள்ளனர். தற்போது இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை நடத்த கேரள கல்வித்துறை அமைச்சர் வி. சிவன்குட்டி உத்தரவிட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.