;
Athirady Tamil News

யாழில் பெண்களுக்கிடையிலான கடின பந்து போட்டி

0

யாழ் சமூக செயற்பாட்டு மையத்தினால் (JSAC) unicef நிறுவனத்தின் நிதிப்பங்களிப்புடன் நடைமுறைப்படுத்தப்படும் Sports For Development & Peace செயற்றிட்டத்தினூடாக நேற்றைய தினம் வடக்கின இளம் பெண்களுக்கான மாபெரும் கடின துடுப்பாட்ட திருவிழா (Northern Cricket Carnival ) யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் வெகுசிறப்பாக இடம்பெற்றுது.

இந்த துடுப்பாட்ட போட்டியில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்கள் ஆகியவற்றை சேர்ந்த சுமார் 70 இளம் பெண்கள் பங்குபற்றியிருந்தார்கள்.

இந்நிகழ்வில் unicef நிறுவன சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் சர்மிலி சதீஸ் , பிரதேச செயலர்கள், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியார்கள், துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர்கள், விளையாட்டு கழகங்கள், துடுப்பாட்ட ரசிகர்கள், அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் பெற்றோர்கள் கலந்துகொண்டிருந்தார்கள்.
வடக்கில் முதன்முதலாக இடம்பெற்ற பெண்களுக்கான கடினபந்து போட்டி என்பதுடன், பெண்கள் மத்தியில் துடுப்பாட்ட ஆர்வத்தினை அதிகரிக்கின்ற வகையில் இத்துடுப்பாட்ட திருவிழா இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.