காணாமல்போன மீனவர் சடலமாக மீட்பு

மாத்தறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொட்டமுன பிரதேசத்தில் கடலில் மூழ்கி காணாமல்போன மீனவர் (07) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
62 வயதுடைய நில்நதிபுர, தொட்டமுன பிரதேசத்தைச் சேர்ந்த மீனவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்கு சென்றிருந்த போது, மீன்பிடிப் படகு விபத்துக்குள்ளானதில் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
இதனையடுத்து, பொலிஸாரும் பிரதேசவாசிகளும் இணைந்து காணாமல்போன மீனவரை தேடும் பணியில் ஈடுபட்ட நிலையில் மீனவரின் சடலத்தை கண்டுபிடித்துள்ளனர்.
சடலம் மாத்தறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.