;
Refresh

This website www.athirady.com/tamil-news/news/1760373.html is currently offline. Cloudflare\'s Always Online™ shows a snapshot of this web page from the Internet Archive\'s Wayback Machine. To check for the live version, click Refresh.

Athirady Tamil News

ஆம்புலன்சில் கொண்டு வரப்பட்ட இறந்த நபர்.., பிடித்த ஹொட்டல் பெயரைக் கேட்டதும் உயிர்பிழைத்த அதிசயம்

0

மருத்துவர்கள் இறந்ததாக கூறிய நபர் ஆம்புலன்சில் கொண்டுவரப்பட்ட போது அவருக்கு பிடித்த ஹொட்டல் பெயரைக் கேட்டதும் உயிர் வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

மீண்டும் உயிர்வந்த அதிசயம்
இந்திய மாநிலமான கர்நாடகா, ஹாவேரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிஷ்டப்பா குடிமணி (45). இவர், உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், அவர் உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் அவரது உடலை மனைவி ஷீலா ஆம்புலன்சில் ஏற்றிக்கொண்டு வீட்டுக்கு கொண்டு வந்துள்ளார்.

அப்போது வரும் வழியில் அவரது மனைவி, “உங்களுக்கு பிடித்த தாபா வந்துவிட்டது. நீங்கள் இரவு உணவு சாப்பிடுகிறீர்களா?” என்று அழுதுகொண்டே கேட்டுள்ளார். அந்த நேரத்தில் உடனடியாக பிஷ்டப்பா குடிமணிக்கு திடீரென்று உயிர் வந்துள்ளது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, பிஷ்டப்பா குடிமணிக்கு இறுதி சடங்கு செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. மேலும், அவருக்கு இறுதி அஞ்சலி போஸ்டர்களும் தயார் செய்யப்பட்டன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.