பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்

யாழ்ப்பாண மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் இன்றைய தினம் (14.02.2025) மு.ப 9.30 மணிக்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்றது .
இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று தனது வரவேற்புரையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக ரூபா 56 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் அவற்றுக்கான முன்மொழிவுகள உரிய முறையில் சமர்ப்பிப்பதற்க்கான முன் ஆயத்த கலந்துரையாடலாக இது அமையும் என தெரிவித்தார் .
இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 56 மில்லியன் ரூபாயினை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தலா 9 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் தேவை அடிப்படையில் பிரதேசசெயலக ரீதியாக இந்த நிதியினை பயன்படுத்துமாறு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் இராமலிங்கம் சந்திரசேகர், அவர்களினால் தெரிவிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் காங்கேசர் பொன்னம்பலம், கருணாநாதன் இளங்குமரன், வைத்தியர் சண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா, ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம், வடக்குமாகண ஆளுநரின் செயலாளர் எம் நந்தகோபாலன் , திணைக்களத்தலைவர்கள் ,பிரதேச செயலாளர்கள், பிரதேச சபைகளின் செயலாளர்கள் ,மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள்,, ஊடகவியலாளர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.