வெளிநாடொன்றில் மாயமான 70 பேர்: தலை வெட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட பயங்கரம்

காங்கோ நாட்டிலுள்ள ஒரு நகரத்தில், கடந்த புதன்கிழமையன்று ஏராளமானோர் மாயமானார்கள்.
இந்நிலையில், அவர்களில் 70 பேரின் உடல்கள், தலை வெட்டப்பட்ட நிலையில் தேவாலயம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தலை வெட்டப்பட்ட நிலையில் 70 உடல்கள்
காங்கோ குடியரசிலுள்ள Kasanga என்னும் நகரில்தான் இந்த பயங்கரம் நிகழ்ந்துள்ளது.
ருவாண்டா ஆதரவு அமைப்பான ADF என்னும் கிளர்ச்சியாளர்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் இந்த கொடுஞ்செயலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அந்த 70 பேரும் ADF அமைப்பால் பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்ட நிலையில், தற்போது அவர்கள் தேவாலயம் ஒன்றில் கட்டிவைக்கப்பட்டு பட்டாக்கத்தியால் வெட்டிக் கொல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.