டெல்லி ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசல்… சிறார்கள் மூவர் உட்பட 15 பேர்கள் மரணம்

கும்பமேளா விழாவில் பங்கேற்கும் பொருட்டு டெல்லி ரெயில் நிலையத்தில் ஒரே நேரத்தில் பயணிகள் திரண்டதால் பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
15 பேர்கள் மரணம்
குறித்த நெரிசலில் சிக்கி 15 பேர்கள் மரணமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. உத்தரபிரதேசம் செல்லும் ரெயில்கள் ஏற்கனவே தாமதமாக வந்த நிலையில், ரெயில்களில் ஏற பயணிகள் முண்டியடித்ததால் பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் மூன்று சிறார்கள் உட்பட 15 பேர்கள் மரணமடைந்துள்ளனர். 10 க்கும் மேற்பட்டவர்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர். காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் சிலரது நிலமையும் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லி ரெயில் நிலையத்தில் மீட்பு பணிகளுக்காக அவசர உதவிப் பிரிவினர் குவிக்கப்பட்டனர். விடுமுறை தினம் என்பதால் கும்பமேளாவில் பங்கேற்க ஒரே நேரத்தில் அதிக பயணிகள் திரண்டதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடொன்றில் வழிப்போக்கர்கள் மீது தாக்குதல் நடத்திய புகலிடக்கோரிக்கையாளர்
ஐரோப்பிய நாடொன்றில் வழிப்போக்கர்கள் மீது தாக்குதல் நடத்திய புகலிடக்கோரிக்கையாளர்
கடந்த மாதம் 29ம் திகதி கும்பமேளாவில் எற்பட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலியானதாக அரசு தரப்பு தெரிவித்துள்ள நிலையில் தற்போது டெல்லி ரெயில் நிலையத்தில் நெரிசல் ஏற்பட்டுள்ளது.
உயர்மட்ட விசாரணை
இந்த நிலையில், ரெயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் துரதிர்ஷ்டவசமானது என்று ரெயில்வே அமைச்சர் கூறியுள்ளார். அத்துடன் கூடுதலாக ரெயில்கள் இயக்கப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதனிடையே, இந்த நெரிசல் சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு ரெயில்வே உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், கூடுதலாக 4 ரெயில்கள் இயக்கப்பட்டுள்ளதாகவும் டெல்லி ரெயில் நிலையத்தில் தற்போது கூட்டம் குறைந்து இருப்பதாகவும் ரெயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனனர். நடந்த சம்பவத்திற்கு பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.