;
Athirady Tamil News

மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும்… காஃபினை தடை செய்த ஐரோப்பிய ஒன்றியம்

0

புதிய இரசாயன பாதுகாப்பு விதிமுறைகளின் கீழ் காஃபினை உட்கொண்டால் அது மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்று ஐரோப்பிய ஒன்றியம் விசித்திரமான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

பிரெஞ்சு நிறுவனம்
ஐரோப்பிய ஒன்றியம் காஃபினை பூச்சிக்கொல்லியாகப் பயன்படுத்துவதையும் தடை செய்துள்ளது. காபியின் மையக் கூறான caffeine இதயம், நீரேற்றம் மற்றும் உடல் வெப்பநிலையில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் கூறியுள்ளது.

பெரியவர்கள் மற்றும் குழந்தைகளில் மத்திய நரம்பு மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தி தூக்கம், பதட்டம், நடத்தை மாற்றங்களை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளது. அத்துடன் கர்ப்பிணிப் பெண்களில் பிறப்பு எடை தொடர்பான பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் எனவும் எச்சரித்துள்ளது.

முட்டைக்கோஸ் மற்றும் உருளைக்கிழங்கு பயிர்களில் இருந்து பூச்சிகளைத் தடுக்க இந்த ஊக்கியைப் பயன்படுத்த அனுமதி கோரி பிரெஞ்சு நிறுவனமான புரோகரீன் தாக்கல் செய்த விண்ணப்பத்திற்கு பதிலளிக்கும் விதமாக ஐரோப்பிய ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

இருப்பினும், ஐரோப்பியர்கள் விரும்பி உட்கொள்ளும் முக்கிய பானமான காபியை பிரஸ்ஸல்ஸ் ஒரு நாள் குறிவைக்கக் கூடும் என்ற அச்சத்தையும் இது தூண்டியுள்ளது.

ஆனால் இந்த முடிவுக்கு எதிர்ப்பும் எழுந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் அதிகாரத்துவம் காஃபினை தடை செய்தது தேவையற்ற தலையீடாக குறிப்பிட்டுள்ளனர்.

தடுக்க வாய்ப்பில்லை
கடைசியா நம்மை காஃபின் நீக்கப்பட்ட காபி குடிக்க கட்டாயப்படுத்தப் போறாங்களா? அது அபத்தமா மாறிடும் என அரசியல் பிரபலம் ஒருவர் பதிலளித்துள்ளார்.

புகைபிடித்தலும் மது அருந்துவதும் நல்லது என்று யாரும் நினைக்கவில்லை, ஆனால் அவை பலரின் வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கூட்டுகின்றன என்பதை மறுக்க முடியாது என டென்மார்க்கின் அரசியல் பிரபலம் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள இந்த எச்சரிக்கை காபி நுகர்வைத் தடுக்க வாய்ப்பில்லை, ஆனால் விதிமுறை அமலுக்கு வரும்போது, ​​காஃபிக்கும் பொருந்தும்.

பெரும்பாலான மக்களின் பிரியமான பானமாக காபியின் கலாச்சார அந்தஸ்து பிரஸ்ஸல்ஸ் அதிகாரத்துவத்துடன் ஒரு மோசமான மோதலை எதிர்கொள்கிறது என்றே விமர்சிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.