நாடளாவிய ரீதியில் 100 புகையிரத நிலையங்களை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் புகையிரதநிலையத்தை தூய்மையாக்கும் பணி

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கிளின் சிறிலங்கா நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் 100 புகையிரத நிலையங்களை தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் புகையிரதநிலையத்தை தூய்மையாக்கும் பணி இன்றைய தினம் இடம்பெற்றது.
யாழ் மாவட்ட சாரணர் இயக்கத்தின் பங்களிப்பில் குறித்த தூய்மையாக்கல் பணியானது இன்று காலை 7.30 மணியளவில் யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் ஆரம்பமானது.
இந் நிகழ்வில் யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் பிரட்லி ஜெனட், யாழ் புகையிரத நிலைய பிரதம அதிபர் தேவராஜா சர்மா சுரேந்திரன், உள்ளுராட்சி உதவி ஆணையாளர் வருணன், சேவ த லைப்(save the life) நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் உ.ராகுலன் மற்றும் சாரணர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
யாழ்ப்பாணம் புகையிரதநிலையத்தில் தூய்மையாக்கல் பணியை ஆரம்பித்த சாரணர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அங்கிருந்து புகையிரத நிலைய வீதியூடாக வைத்தியசாலை வீதிவரை நடைபவனியாக வந்தடைந்து வீதிகளில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்தவாறு யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தை வந்தடைந்தனர்.
யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திலும் சாரணர்கள் தூய்மையாக்கல் பணியில் ஈடுபட்டனர்.