;
Athirady Tamil News

பிரான்சில் எதிர்பார்த்ததைவிட பொருட்கள் விலை அதிக உயர்வு

0

பிரான்சில், பொருட்கள் விலை எதிர்பார்த்ததைவிட அதிக அளவு உயர்ந்துள்ளதாக பிரெஞ்சு புள்ளிவிவர அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

எதிர்பார்த்ததைவிட பொருட்கள் விலை அதிக உயர்வு
பிரெஞ்சு புள்ளிவிவர அமைப்பான INSEE, புதன்கிழமை வெளியிட்ட முதற்கட்ட தரவுகளின்படி, பிரான்சில் பொருட்களின் விலைகள் ஏப்ரல் மாதத்தில் எதிர்பாராத உயர்வைக் கண்டது தெரியவந்துள்ளது.

குறிப்பாக உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பே இந்த விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில் பணவீக்க விகிதம் 0.7 சதவிகிதம் அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் பலர் கணித்திருந்த நிலையில், அது எதிர்பார்த்ததற்கு அதிகமாக, 8 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

மேலும், உணவு மற்றும் ஆற்றல் விலைகள் அதிகரித்துள்ளதுடன், பிரான்சில் சேவைகள் மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களுக்கான விலைகளும் முந்தைய மாதத்தைப் போலவே உயர்ந்துள்ளதாக INSEE தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.