;
Athirady Tamil News

ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் நிசாம் காரியப்பருடன் சந்திப்பு

0

ஐரோப்பிய ஒன்றிய (EU) பிரதிநிதிகள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பரை நேற்று சந்தித்தனர்.

இந்த சந்திப்பில் முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் கீழ்காணும் விடயங்களை ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

இலங்கை தற்போது பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளும் கட்டத்தில், குறிப்பாக அமெரிக்காவின் எதிர்பாராத உயர்வு வரி விதிப்புகளின் மத்தியில், GSP+ சலுகை இலங்கைக்கு வழங்கப்படுவது மிக முக்கியமானது என்பதை எமது கட்சி முழுமையாக ஏற்றுக் கொள்கிறது.

இருப்பினும் ஸ்ரீலங்கா அரசாங்கம் கீழ்க்காணும் விடயங்களில் நடந்து கொள்ளும் விதி கவலைக்குரியதாக உள்ளதாகவும் பிரதிநிதிகளிடம் தெரிவித்தார.

பயங்கரவாதத் தடுப்பு சட்டம் (PTA) இரத்து செய்யப்பட்டு, சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமைத் தரநிலைகளுடன் முழுமையாக ஒத்துச் செல்லும் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

புதிய சட்டம் அமலுக்கு வரும் வரை, PTA பயன்படுத்தப்பட கூடாது., ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான தொடர்ந்துவரும் விசாரணைகளுக்கு மாத்திரம் ஒருவிதி விளக்கு இருக்கலாம். PTA சட்டத்தை கருத்து சுதந்திரத்தை அடக்குவதற்காகப் பயன்படுத்துவதை கடுமையாகக் கண்டிக்கிறோம்.

உதாரணமாக, பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் கொடுமைகளை எதிர்த்து ஸ்டிக்கர் ஒட்டியதற்காக PTA பயன்படுத்தி முஸ்லிம் இளைஞனை தடுத்து வைத்தது ஏற்க முடியாதது. அதை நாங்கள் கண்டிக்கின்றோம்.

இதற்காக உரிய இளைஞனிடம் அரசாங்கம் மன்னிப்பு கோர வேண்டும். மாகாண சபை தேர்தல்கள் விரைவில் நடத்தப்பட வேண்டும் மற்றும் அவற்றை முன்னெடுக்க தேவையான சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

சிறந்த ஜனநாயக நடைமுறைகளுக்கு ஏற்ப, உறுப்பினர்கள் எந்த கட்சியின் கீழ் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும் அவர்கள் உண்மையாகவே எந்தக் கட்சியில் சேர்ந்தவர்கள் என்று விடயத்தில் அறிந்து அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும்.

முக்கியமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரவுப் ஹக்கீம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற குழுவின் தலைவராக சபாநாயகர் ஏற்க மறுப்பதை ஐரோப்பிய ஒன்றியம் கண்டிக்க வேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.