;
Athirady Tamil News

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வியட்நாமுக்கு விஜயம்

0

வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, எதிர்வரும் 4 ஆம் திகதி வியட்நாமுக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளார்.

அதற்காக, ஜனாதிபதி இன்று (03) இரவு நாட்டிலிருந்து புறப்படுகிறார்.

வியட்நாம் மற்றும் இலங்கைக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளின் 55 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்த விஜயம் இடம்பெறவுள்ளது.

இந்த விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவுகளை மேலும் உறுதிப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விஜயத்தின் போது வியட்நாம் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதுடன், கம்யூனிஸ கட்சியின் பொதுச் செயலாளர் உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் பலரையும் சந்திக்கவுள்ளார்.

மேலும், ஹோ சி மிங் நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் வெசாக் தின கொண்டாட்டங்களில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரை ஒன்றையும் வழங்கவுள்ளார்.

இதன்போது இரு தரப்பினருக்கும் இடையில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.