உருகும் சாலை, சிக்னல்! ஐரோப்பிய வெப்ப அலை முழு ஒத்திகை – உலக சுகாதார நிறுவனம்
ஐரோப்பிய நாடுகளில் கடுமையான வெப்பம் பதிவாகி சாலைகளில் தார்கள் உருகி ஓடும் நிலை ஏற்பட்டிருப்பது, முழு ஒத்திகை என்று உலக சகாதார நிறுவனம் வர்ணித்துள்ளது.
அதாவது, ஐரோப்பிய நாடுகளில் தற்போது நிலவரும் கடுமையான வெப்ப அலையானது, வருங்காலத்தில் ஏற்படவிருக்கும் மிகக் கொடுமையான வெப்ப அலைக்கு எல்லாம் முழு ஒத்திகை என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெப்ப அலைகள் இனி அரிதாக நிகழும் விசித்திரமான நிகழ்வுகளாக இருக்கப்போவதில்லை என்று அது கூறியிருக்கிறது.
மேலும், நாடு முழுவதும் இதுபோன்ற வெப்ப அலைகளை எதிர்கொள்ள அரசுகளும் தயாராக வேண்டும், ஒவ்வொரு கோடைக்காலத்தின்போதும், வெப்ப அலைகளுக்கு ஏற்ப தயாராகத் தவறிவிடுகிறோம். அதனால் ஏராளமான இன்னுயிர்களை இழக்கிறோம் என்றும் உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.