;
Athirady Tamil News

காத்தான்குடியில் யாசகர்கள் குழு அடிதடி!

0

மட்டக்களப்பு காவல்பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி பிரதான வீதியில் நேற்று (19) மாலை இரு யாசகர்கள் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புனித நோன்பு காலத்தில் ஏராளமான யாசகர்கள்
புனித நோன்பு காலத்தில், தொலைதூர மாகாணங்களில் இருந்து ஏராளமான மக்கள் காத்தான்குடி பகுதிக்கு யாசகம் எடுக்க வருகிறார்கள்,

அவர்கள் இரவில் கடைகளுக்கு முன்னால் உறங்கி, மறுநாளும் மீண்டும் யாசகம் எடுக்கிறார்கள். அத்தகைய இரு யாசகர்கள் குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் மோதலில் ஈடுபட்டவர்கள் மதுபோதையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தை அடுத்து காயமடைந்தவர்கள் காத்தான்குடி காவல்துறை உதவியுடன் நோயாளர் காவு வண்டி மூலம் மட்டக்களப்பு போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.