;
Athirady Tamil News

மீண்டும் லொறிகளுக்குள் பதுங்கி பிரித்தானியாவுக்குள் நுழையத் துவங்கியுள்ள புலம்பெயர்வோர்

0

சட்டவிரோத புலம்பெயர்வோர், மீண்டும் லொறிகளுக்குள் பதுங்கி பிரித்தானியாவுக்குள் நுழையத் துவங்கியுள்ளார்கள்.

மீண்டும் லொறிகளுக்குள்…
2018ஆம் ஆண்டுவரை, சட்டவிரோத புலம்பெயர்வோர் பிரித்தானியாவுக்குள் நுழைய கையாண்ட முக்கிய வழிமுறை இப்படி லொறிகளின் பின்னால் மறைந்து கொள்வதுதான்.

அதற்குப் பின் சிறுபடகுகள் மூலம் ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைவது கணிசமாக அதிகரித்தது.

இந்நிலையில், தற்போது மீண்டும் லொறிகளின் பின்னால் பதுங்கி பிரித்தானியாவுக்குள் நுழையத் துவங்கியுள்ளார்கள் சட்டவிரோத புலம்பெயர்வோர்.

நேற்று முன் தினம், தென்கிழக்கு லண்டனிலுள்ள Charlton என்னுமிடத்துக்கு வந்த லொறி ஒன்றின் பின்பக்கத்தை சாரதி திறக்க, லொறிக்குள்ளிருந்து 13 பேர் கீழே குதித்து ஓடத்துவங்கினார்கள்.

அதிகாலை 8.00 மணியளவில் இந்த சம்பவம் நடக்க, உடனடியாக அதிகாரிகளுக்கு தகவலளிக்கப்பட, விரைந்துவந்த பொலிசார் அவர்களை கைது செய்தார்கள்.

ஸ்பெயினிலிருந்து, Sainsbury’s பல்பொருள் அங்காடிகளுக்கு பொருட்கள் கொண்டு வரும் அந்த லொறியில் இந்த சட்டவிரோத புலம்பெயர்வோர் பதுங்கியிருந்து பிரித்தானியா வந்தது தெரியவந்துள்ளது.

விடயம் என்னவென்றால், இப்படி லொறிகளுக்குள் பதுங்கி பயணிப்பதும் ஆபத்தான ஒன்றாகும்.

2019ஆம் ஆண்டு, இப்படி லொறி ஒன்றிற்குள் பதுங்கி பயணித்த 39 வியட்நாம் நாட்டவர்கள், எசெக்ஸில், உயிரற்ற நிலையில் லொறிக்குள் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.