;
Refresh

This website www.athirady.com/tamil-news/infomation/1780647.html is currently offline. Cloudflare\'s Always Online™ shows a snapshot of this web page from the Internet Archive\'s Wayback Machine. To check for the live version, click Refresh.

Athirady Tamil News

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால் முன்னர் அமைக்கப்பட்ட மூன்றாம் வட்டார குளத்தை, அழகுபடுத்திய *தீர்ப்பாயம் வாட்ஸாப் குழும* மயூரன்.. (முழுமையான படங்கள், வீடியோ)

0

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால் அமைக்கப்பட்ட மூன்றாம் வட்டார குளத்தை, அழகுபடுத்திய *தீர்ப்பாயம் வாட்ஸாப் குழும* மயூரன்.. (முழுமையான படங்கள், வீடியோ)

புங்குடுதீவு மூன்றாம் வட்டாரம் சங்கத்தாக்கேணியர் பகுதியில் அமைந்திருந்த குளத்தை சுமார் எட்டு வருடங்களுக்கு முன்னர் சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் ஆழப்படுத்தி சுற்றுச்சுவர் கட்டி, கால்நடைகள் இறங்கியேறி தண்ணீர் அருந்துவதுக்கு வசதியாகவும் அவற்றுக்குரிய வகையில் நடைபாதை அமைத்துக் கொடுத்து இருந்தனர். ஆயினும் காலப்போக்கில் அவை சீரழிந்து, குப்பைகூளங்கள், பாறாங்கற்கள் போன்றவற்றினால் மூடிய நிலையில் காணப்பட்டதை அறிந்து தீர்ப்பாயம் வாட்ஸாப் குழுமத்தில் உள்ள திரு.மயூரன் தகவல் வழங்கி இருந்தார்.

தீர்ப்பாயம் குழுமமானது கனடா, சுவிஸ், லண்டன், பிரான்ஸ், நோர்வே, இலங்கையில் உள்ள எமது புங்குடுதீவு உறவுகளைக் கொண்டது. இதில் ஊர் சார்ந்தும், ஊரின் முன்னேற்றம் கருதியும் கதைப்பதுடன், நண்பர்களாக நகைச்சுவையாகவும் ஆக்ரோஷமாவும் உரையாடுவார்கள். தேவை ஏற்படும் போது ஊரில் உள்ள மண்ணின் மைந்தர்கள், படித்தோர், சான்றோர், அரச அதிகாரிகள் போன்றவர்களுடன் தொடர்பேற்படுத்தி அடுத்த நகர்வை முன்னெடுப்பவர்கள்.

அதில் ஒருவரே புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தை தாயின் பிறப்பிடமாகவும், கிழக்கூரை தந்தையின் பிறப்பிடமாகவும் புங்குடுதீவு கிழக்கூரில் வாழ்ந்து இப்போது லண்டனில் வதியும் ஊர்ப்பற்றாளன் திரு.பரமலிங்கம் மயூரன் அவர்களின் முயற்சியினாலும், அவரது நிதிப் பங்களிப்பிலும் மேற்படி சங்கத்தானைகேணியர் பிரதேசக் குளமானது மீண்டும் குப்பைகூளங்கள், பாறாங்கற்கள் அகற்றப்பட்டதுடன், ஆழப்படுத்தப்பட்டு புனரமைக்கப்பட்டது. அத்துடன் குளத்தை சுற்றி இருந்த பற்றைக்காடுகளும் அழிக்கப்பட்டு துப்பரவாக்கப்பட்டது.

இது தொடர்பாக தீர்ப்பாயம் வாட்ஸாப் குழுமத்தில் கடந்த மூன்று மாதத்துக்கு முன்னரே அக்குழுமத்தில் உள்ள நண்பர்கள் உரையாடிய போதிலும், ஊரில் தொடர்ச்சியாக பெய்து வந்த மழை காரணமாக உடனடியாக இதனை செய்ய முடியாத சூழ்நிலை காணப்பட்டது. பின்னர் தீர்ப்பாயம் வாட்ஸாப் குழுமத்தில் உள்ளவர்களில் ஒருவரான சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய முன்னாள் தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்களின் வேண்டுகோளை ஏற்று திரு.பரமலிங்கம் மயூரன் அவர்கள் இதனை நேற்றுமுன்தினம் நிறைவேற்றி உள்ளார்.

திரு.பரமலிங்கம் மயூரன் ஊர் சார்ந்து பல நல்ல சேவைகளை நீண்டகாலமாக செய்து வரும் ஊர்ப்பற்றாளன். அவருக்கும், இதுக்காக பாடுபட்ட அனைவருக்கும், குறிப்பாக தீர்ப்பாயம் வாட்ஸாப் குழுமத்தினருக்கும் புங்குடுதீவு மக்கள் தமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.

மக்கள் சேவையே மகேசன் சேவை..

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தால் முன்னர் அமைக்கப்பட்ட மூன்றாம் வட்டார குளத்தை, அழகுபடுத்திய *தீர்ப்பாயம் வாட்ஸாப் குழும* மயூரன்.. (வீடியோ)

இருதினத்துக்கு முன்னர் (04.05.2025) காணப்பட்ட நிலைகளின் புகைப்படங்கள்.. 👇👇👇👇👇

நேற்றையதினம் புனரமைக்கப்பட்ட போதான புகைப்படங்கள்.. 👇👇👇👇👇
(இக்குளத்தை ஒட்டியபடி வீதியோரத்துக்கும், குளத்துக்கும் இடையில் பள்ளம் காணப்பட்டதினால் இக்குளத்தில் இருந்து அகற்றப்பட்ட பாறாங்கற்கள் மூலம் அவை நிரப்பப்பட்டன குறிப்பிடத்தக்கது.)

புனரமைப்பின் பின்னரான புகைப்படங்கள்.. 👇👇👇👇👇

You might also like

Leave A Reply

Your email address will not be published.