அருந்ததியின் மாற்று மோதிரம் நிகழ்வு
அருந்ததியின் மாற்று மோதிரம் நிகழ்வு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது.
அழகு கலை நிபுணர்கள், ஆரி வேலைபாடுகள் செய்யும் கலைஞர்கள், புகைப்பட கலைஞர்கள், வீடியோ கலைஞர்கள், ஆடை வடிவமைப்பாளர்கள் என திருமண நிகழ்வுடன் தொடர்புடையவர்கள் பங்கேற்றனர்.
நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெய்சந்திரமூர்த்தி, அழகுக்கலை நிபுணர்கள் உள்ளிட்டவர்கள் விருந்தினர்களாக கலந்து கொண்டு பங்கேற்பாளர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தனர்.
நிகழ்வில் அருந்ததி சஞ்சிகையும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
