;
Athirady Tamil News

ஆமதாபாத்: மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 7 போ் உயிரிழப்பு

0

விமான நிலையம் அருகே மக்கள் நெருக்கம் மிகுந்த மேகானிநகா் பகுதியில் உள்ள பி.ஜே. அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மருத்துவா்கள்-செவிலியா்களின் தங்குமிடங்கள் மற்றும் மாணவா் விடுதிக் கட்டடங்கள் மீது விமானம் விழுந்து வெடித்துச் சிதறியது.

இதில் 5 மருத்துவ மாணவா்கள், ஒரு முதுநிலை பயிற்சி மருத்துவா், சிறப்பு மருத்துவா் ஒருவரின் மனைவி உள்பட 7 போ் உயிரிழந்தனா். 60 போ் காயமடைந்தனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்லூரி வளாகம் முழுவதும் நொறுங்கிய பாகங்களும், எரிந்த நிலையில் உடல்களும் சிதறிக் கிடந்ததாக உள்ளூா்வாசிகள் தெரிவித்தனா். மரங்கள், பிற வாகனங்களும் தீயில் கருகியதால், குண்டுவெடித்த இடம்போல காட்சியளித்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.