;
Athirady Tamil News

கரையொதுங்கியுள்ள பிளாஸ்டிக் துகள்கள் குறித்து ஆராயுமாறு பணிப்பு !

0

யாழ்ப்பாணம் நெடுந்தீவு உள்ளிட்ட தீவக பகுதிகள் மற்றும் சிலாபம் கடற்கரைகளில் ஒதுங்கியுள்ள Plastic Pellets குறித்து உடனடியாக விரிவான ஆய்வொன்றை மேற்கொள்ளுமாறு தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிலையத்திற்கு (NARA) கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் தெரிவித்துள்ளார்.

இந்த Plastic Pellets கடற்கரையில் ஒதுங்கியிருப்பதன் மூலம் கடல் சூழலியல் மற்றும் கடற்கரையோர சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு ஏற்படக்கூடிய பாதகமான தாக்கங்கள் குறித்து அமைச்சர் தனது தீவிர கவனத்தைச் செலுத்தியுள்ளார்.

கடல் மாசடைதல், குறிப்பாக பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் மாசடைதல், சுற்றுச்சூழலுக்கும் கடல்வாழ் உயிரினங்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதால், இந்த நிலைமை குறித்து உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு நாரா நிறுவன அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்

You might also like

Leave A Reply

Your email address will not be published.