;
Athirady Tamil News

நாகப்பட்டினம், காங்கேசன்துறை பயணிகள் படகு சேவை; நிதி உதவி நீடிப்பு

0

இந்தியாவின் நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையே முன்னெடுக்கப்படும் பயணிகள் படகு சேவைக்காக , இந்திய அரசாங்கம் மேலும் ஒரு வருடத்துக்கு நிதி உதவியை நீடிக்க தீர்மானித்துள்ளது.

இந்த நிதி உதவி, ஆண்டுதோறும் 300 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக (மாதத்திற்கு சுமார் 25 மில்லியன் ரூபா) வழங்கப்படுகிறது.

இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சார, பொருளாதாரம்
அதன்படி முந்தைய ஆண்டைப் போலவே, முக்கிய தளபாட மற்றும் செயல்பாட்டு செலவுகளை ஈடு செய்வதன் மூலம் சேவையின் மலிவு மற்றும் செயல்பாட்டு நிலைத்தன்மையை உறுதி செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்டில் மீண்டும் நாகப்பட்டினம் – காங்கேசன்துறை பயணிகள் படகு சேவை தொடங்கப்பட்டதிலிருந்து 15,000 க்கும் மேற்பட்ட பயணிகளின் போக்குவரத்து எளிதாக்கப்பட்டுள்ளது.

அத்தோட இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சார, பொருளாதார மற்றும் சமூக பரிமாற்றங்களையும் வலுப்படுத்தியுள்ளது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல்சார் இணைப்பு புத்துயிர் பெறுவதில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகும்.

படகு சேவைக்கான நிதி உதவி தொடர்வதானது, 2024 டிசம்பரில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இந்திய விஜயத்தின் போதும், கடந்த ஏப்ரலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையின் போதும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.

அதன்படி, மேம்பட்ட கடல்சார் இணைப்புக்கான பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வையுடன் ஒத்ததாகவுள்ளது.

இந்நிலையில் இணைப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தும் மேலதிக வழித்தடங்கள் மற்றும் சேவைகளை ஆராய்வது எதிர்காலத் திட்டங்களில் அடங்கும் என கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராயலம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.