;
Athirady Tamil News

தேனிலவுக்கு முன் காதலனுடன் தப்பிய புது மணப்பெண்! நல்லவேளை, உயிர் பிழைத்தேன் என மணமகன் மகிழ்ச்சி!

0

உத்தரப் பிரதேசத்தில் திருமணமான ஒரு மாதத்துக்குள் காதலனுடன் பெண் சென்ற நிலையில், பேச்சுவார்த்தை மூலம் புதுமணத் தம்பதியை குடும்பத்தினர் பிரித்துவைத்தனர்.

பதாவுன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுனில் (வயது 23). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 20 வயது பெண்ணுக்கும் கடந்த மே 17 ஆம் தேதி திருமணமானது.

திருமணமாகி ஒரு வாரம் கணவன் வீட்டில் இருந்த பெண், தனது தாய் வீட்டுக்குச் சென்ற 10 நாள்களில் காதலனுடன் தலைமறைவாகியுள்ளார்.

இதனை அறியாத சுனில், தனது மனைவியைக் காணவில்லை என்று காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை பிசெளலி காவல் நிலையத்துக்கு வந்த சுனிலின் மனைவி, காதலனுடன் வாழ விரும்புவதாக காவலர்களிடம் தெரிவித்துள்ளார்.

இரு குடும்பத்தினருடனும் காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தை சமரசத்தில் முடிந்த நிலையில், இருவீட்டாரும் நகைகள் மற்றும் பொருள்களைத் திருப்பி ஒப்படைத்து உறவை முடித்துக் கொண்டனர்.

சுனில் மகிழ்ச்சி

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சுனில் கூறுகையில்,

“தேனிலவுக்கு உத்தரகண்ட அழைத்துச் செல்ல திட்டமிட்டிருந்தேன். ஆனால், அவள் தனது காதலுடன் சென்றது ஒருவிதத்தில் மகிழ்ச்சி அளிக்கிறது.

ராஜா ரகுவன்ஷியைப் போல் எனது வாழ்க்கை முடிவடையவில்லை என்று மகிழ்ச்சி அடைகிறேன். தற்போது மூவரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். அவளுக்கு காதலன் கிடைத்துவிட்டான். என் வாழ்க்கை பாழாகவில்லை” எனத் தெரிவித்தார்.

ஏற்கெனவே, மேகாலயாவுக்கு கணவன் ராஜா ரகுவன்ஷியுடன் தேனிலவு சென்ற சோனம் என்ற பெண், தனது காதலனுடன் இணைந்து கணவனைக் கொன்ற சம்பவம் இந்தியாவைவே உலுக்கியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.