;
Athirady Tamil News

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் ஏற்படவுள்ள மாற்றம்

0

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை ஒரேயடியாக நிறுத்தப்படாது என்று கல்வி மற்றும் உயர்கல்வி பிரதியமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இன்றைய (20) நாடாளுமன்ற அமர்வில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

பரீட்சை திணைக்களம்
அதன்படி, 2029 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையை மாற்றாமல் நடத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

2029 ஆம் ஆண்டுக்குப் பிறகு புலமைப்பரிசில் நடத்துவது குறித்து 2028 ஆம் ஆண்டில் பரிசீலிக்க ஒரு குழு நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் என்றும் பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பரீட்சை அழுத்தத்தைக் குறைப்பதற்கான திட்டத்தை பரீட்சை திணைக்களம் தற்போது தயாரித்து வருகிறது.

பாடசாலைகளுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகளை படிப்படியாக நீக்கவும், புலமைப்பரிசில் காரணமாக மாணவர்கள் மீதான அழுத்தத்தைக் குறைக்கவும் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.