;
Athirady Tamil News

செம்மணி புதைகுழிக்கு நீதியான விசாரணை நடாத்தபடவேண்டும் எனவும் உண்மை கண்டறியபடவேண்டும் எனவும் கோரி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

0

செம்மணி புதைகுழிக்கு நீதியான விசாரணை நடாத்தபடவேண்டும் எனவும் உண்மை கண்டறியபடவேண்டும் எனவும் கோரி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதன்போது அதிகளவான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இலங்கை அரசே எம்மிடம் இருந்த வலிந்து அபகரிக்கபட்டு படுகொலை செய்யப்பட்டு மனித புதைகுழிகளில் புதைக்கப்பட்ட எமது அன்புக்குரியோரின் பெறுமதி மிக்க நீதி கோருகின்றோம் எனும் தொனிப்பொருளில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் செம்மணியில் இன்று காலை 10 மணிமுதல் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீதி வேண்டும், நீதி வேண்டும் செம்மணி படுகொலைக்கு நீதி வேண்டும், இது மண்ணல்ல புதை உண்மை அதை தோண்டி காட்டுவோம் , ஐநா செவி கொடு ஜனாதிபதி கண்விழி மனித உரிமையை பாதுகாப்பீர், புதைகுழிகள் அடைக்கலம் அல்ல உண்மை பேசும் தளங்கள், விசாரணையை துரிதபடுத்து, செம்மணிக்கு ஒரு நீதி பட்டலந்தவுக்கு ஒரு நீதியா ஆகிய கோஷங்களை எழுப்பிய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது பாதிக்கப்பட்ட தரப்பினர், பொதுமக்கள், வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினர் மதகுரு தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்

இதேவேளை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து கடமைகளுக்காகவும் செம்மணி புதைகுழி பாதுகாக்கும் முகமாகவும் அதிகளவு பொலிஸார் போராட்டகளத்தில் குவிக்கப்பட்டு இருந்ததை அவதானிக்க முடிந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.