;
Athirady Tamil News

ஈரானில் முடங்கியுள்ள இணையம் ; மக்கள் பெரும் பாதிப்பு

0

ஈரானில் சுமார் 48 மணித்தியாலங்கள் இணையத் தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இஸ்ரேலுடன் ஏற்கனவே பதற்றமான நிலைமைக்கு இடையில் இந்த தடை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 48 மணி நேரமாகவும் மிகவும் குறைந்த அளவில் இணையத்தை அணுக முடிந்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

நெட்புளொக்ஸ் NetBlocks எனும் இணைய மேலாண்மை கண்காணிப்பு அமைப்பின் தரவுகளின்படி, புதன்கிழமை பிற்பகலில் இணைய இணைப்பு 3% ஆகக் குறைந்துவிட்டது.

அதிலிருந்து இது வரை அந்த நிலை தொடர்ந்து வருகிறது. இந்த இணையத் தடையைத் தொடர்ந்து, மக்கள் தகவல்களைப் பெற முடியாமலும், சமூக ஊடகங்களைப் பயன்படுத்த முடியாமலும் சிக்கலில் உள்ளனர்.

ஈரானின் Bank Sepah வங்கி மீது மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதலுக்கு பிறகு இந்த தடை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தாக்குதலுக்கு இஸ்ரேலுடன் தொடர்புடைய ஹேக்கர் குழு பொறுப்பேற்றுள்ளது.

மேலும் அதன் விளைவாக வங்கியின் ஏ.டி.எம். சேவைகள் முடங்கியுள்ளன. இஸ்ரேலிய படையினர் கடந்த ஒரு வாரமாக தொடர் தாக்குதல்களை மேற்கொண்டுள்ள நிலையில், ஈரானில் பகுதி அடிப்படையிலான இணையத் தடைகள் ஏற்கனவே அமலிலிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.