;
Athirady Tamil News

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் ரூ.4 கோடி மதிப்புடைய பத்திரத்தை கோவில் உண்டியலில் போட்ட கணவர்

0

மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கணவர் ஒருவர் ரூ.4 கோடி மதிப்புடைய பத்திரத்தை கோவில் உண்டியலில் போட்டுள்ளார்.

உண்டியலில் பத்திரம்

தமிழக மாவட்டமான திருவண்ணாமலை, கண்ணமங்கலம் அடுத்த படவேடு பகுதியை சேர்ந்த தம்பதியினர் விஜயன் (65) மற்றும் கஸ்தூரி. இதில் விஜயன் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஆவார்.

இவர்களுக்கு 2 மகள்கள் உள்ள நிலையில் இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். மேலும், மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக விஜயன் மன உளைச்சலுக்கு ஆளாகினார்.

இந்நிலையில், கடந்த மே 2-ம் திகதி விஜயன் படவேடு ரேணுகாம்பாள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தபோது ரூ.4 கோடி மதிப்புடைய பத்திரத்தை கோவில் உண்டியலில் போட்டு சென்றார்.

இந்த கோயிலில் உண்டியல் எண்ணும் பணி இன்று நடைபெற இருந்தது. அப்போது அங்கு வந்த விஜயன் உண்டியலில் ரூ.4 கோடி மதிப்புடைய பத்திரம் உள்ளது. அதனை கோயில் பெயரில் மாற்றி எழுதுங்கள் எனக் கூறினார்.

இதனை கேட்டு கோவில் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த அவரது மனைவி மற்றும் மகள்கள் கோவிலுக்கு வந்து சொத்து பத்திரம் எங்களுக்கு சொந்தமானது என்றும், அதனை எங்களது அனுமதி இல்லாமல் எப்படி எழுதி தர முடியும் என்றும் கேட்டு அழுதனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.