;
Athirady Tamil News

துரத்தியடிக்கப்பட்ட அமைச்சர் சந்திரசேகர்: செம்மணி போராட்டத்தில் தொடரும் பதற்றம்

0

செம்மணியில் போராட்ட களத்தில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயசந்திரமூர்த்ர்தி ஆகியோர் விரட்டியடிக்கபட்டனர் .

மதியம் 1 மணியளவில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் றஜீவன் ஜெயசந்திரமூர்த்தி ஆகியோர் செம்மணி போராட்ட திடலுக்கு சென்றனர் . இதன் பொழுது போராட்டகாரர்களால் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் போத்தல்களால் எறியப்பட்டு விரட்டியடிக்க பட்டார் இதேவேளை அவரது வாகனத்தின் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது . இதேவேளை விரைவாக குறித்த இடத்தை விட்டு அமைச்சர் வெளியேறினார் .

இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயசந்திரமூர்தத்தி காத்திருந்த நிலையில் அவரையும் சூழ்ந்து கொண்டோர் அவரையும் விரட்டியடித்தனர் .

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.