;
Athirady Tamil News

‘ஸ்மார்ட் போர்ட்’ ,  நவீன வசதிகளுடன் கூடிய  5  மலசல கூடங்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு

0
கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட  அஸ்-ஸுஹரா பாடசாலையின் கல்வி மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு  கல்வி விசேட வேலைத்திட்டத்தின் கீழ் ‘ஸ்மார்ட் போர்ட்’ கையளிக்கும் சிறப்பு விழா மற்றும் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் நீண்டகாலத் தேவையான  நவீன வசதிகளுடன் கூடிய  5  மலசல கூடங்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வும்  2026 ஆண்டிற்கான  வருடாந்த இப்தார் நிகழ்வும் கடந்த புதன்கிழமை(18)   பாடசாலை அதிபர்   தலைமையில்  நடைபெற்றது.

கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன்   2026 ஆண்டிற்கான  வருடாந்த இப்தார் நிகழ்வில் ஆன்மீக உரையினை கல்முனை ஜம்மியதுல் உலமா சபைத் தலைவர் முர்ஷித் முப்தி   நிகழ்த்தினார்.

இது தவிர கிராஅத், அதிபர் உரை, ஆன்மீக உரை, வலயக் கல்விப் பணிப்பாளர் உரை,  நன்றியுரை, ஸலவாத், என இந்நிகழ்வு  ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

மேலும் ஓய்வு பெற்ற   கல்விப் பணிப்பாளரும் சிரேஸ்ட ஊடகவியலாளருமான  ஏ.எல்.முகம்மட் முக்தார்   கௌரவ அதிதியாக பங்கேற்று நிகழ்வைச் சிறப்பித்தார். பிரதி,உதவி கல்வி பணிப்பாளர்கள்,திணைக்கள தலைவர்கள், பழைய மாணவர் சங்க செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் கல்வி அதிகாரிகள் , வலய தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ பாடசாலைகளின் அதிபர்கள்,ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள்,பாடசாலை அபிவிருத்தி சங்க நிறைவேற்று குழு உறுப்பினர்கள்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொண்ட இந்நிகழ்வில் ‘ஸ்மார்ட் போர்ட்’ கையளிக்கும் சிறப்பு விழா மற்றும் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் நீண்டகாலத் தேவையான  நவீன வசதிகளுடன் கூடிய  5  மலசல கூடங்கள் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டு பிரதம அதிதியான கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீமினால்   கையளிக்கப்பட்டது.

மேலும் மாணவர்களின் எதிர்கால கல்விப் பயணத்திற்கு புதிய திசையை வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக இவ்விழா அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.