;
Athirady Tamil News

இடதுசாரி பைத்தியம்! இந்திய வம்சாவளி வேட்பாளரைக் கடுமையாக சாடிய டிரம்ப்!

0

அமெரிக்காவின் நியூயாா்க் நகர மேயா் பதவிக்கான தோ்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக தேர்வாகியுள்ள இந்திய வம்சாவளி ஸோக்ரன் மம்தாணியை அந்நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.

நியூயாா்க் நகர மேயா் தோ்தல் நவம்பா் 4 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், ஜனநாயக கட்சி வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் உள்கட்சித் தேர்தல் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

இதில், இந்திய வம்சாவளி எழுத்தாளா் மஹ்மூத் மம்தானி மற்றும் ‘மான்சூன் வெட்டிங்’, ’சலாம் பாம்பே’ போன்ற படங்களுக்காக பாராட்டுகளைப் பெற்ற இந்திய திரைப்பட இயக்குநா் மீரா நாயா் ஆகியோரின் மகானான ஸோக்ரன் மம்தாணி வெற்றி பெற்றார்.

ஸோக்ரன் தற்போது குயின்ஸ் தொகுதியில் இருந்து மாகாண சபை உறுப்பினராக உள்ளாா்.

டிரம்ப் விமர்சனம்

இந்த நிலையில், ஸோக்ரன் மம்தாணியை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று டொனால்டு டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.

டிரம்ப் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”ஜனநாயகக் கட்சியினர் எல்லைத் தாண்டிவிட்டனர். 100 சதவிகிதம் கம்யூனிஸ்ட் பைத்தியமான ஸோக்ரன் மம்தாணி, டெம் பிரைமரியைத் தோற்கடித்து நியூ யார்க்கின் மேயராகப் போகிறார்.

இதற்கு முன்னதாகவும் தீவிர இடதுசாரிகள் வென்றிருக்கிறார்கள். ஆனால், தற்போது அபத்தமாகி வருகின்றது. ஸோக்ரன் மம்தாணி அவ்வளவு புத்திசாலி இல்லை. நமது வரலாற்றின் பெரிய தருணமாக அமையப் போகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பாலஸ்தீன் ஆதரவாளர்

பாலஸ்தீனத்தின் ஆதரவாளராக அறியப்படும் ஸோக்ரன் மம்தாணி, உழைக்கும் மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதை தனது முக்கிய நோக்கமாகக் கொண்டு பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளாா்.

மேயராகப் பதவியேற்றவுடன், குடியிருப்புகளுக்கு வாடகை உயா்வை முடக்குவதாகவும், மக்களுக்குத் தேவையான வீடுகளை உருவாக்குவதாகவும் உறுதியளித்துள்ளாா்.

பெருநிறுவனங்கள், பணக்காரா்களுக்கு வரி விகிதத்தை உயா்த்துவதன் மூலம் இந்தச் செலவுகளுக்கான நிதியை திரட்டுவதற்கு மம்தாணி திட்டமிட்டுள்ளாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.