;
Athirady Tamil News

அமெரிக்கா – சீனா வர்த்தக ஒப்பந்தம்! விரைவில் இந்தியாவுடன்..! – டிரம்ப் சூசகம்

0

அமெரிக்கா சீனாவுடன் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும், விரைவில் இந்தியாவுடன் ஒரு மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை தெரிவித்தார்.

பிக் பியூட்டிஃபுல் பில் நிகழ்வில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசுகையில், “எல்லோரும் ஒரு ஒப்பந்தம் செய்து அதில் ஒரு பங்கைப் பெற விரும்புகிறார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு, பத்திரிகையாளர்கள், உங்களுக்கு உண்மையிலேயே ஆர்வமுள்ள யாராவது இருக்கிறார்களா? என்று கேட்டது நினைவில் இருக்கும். சரி, நேற்றுதான் நாங்கள் சீனாவுடன் கையெழுத்திட்டோம். எங்களுக்கு சிறந்த ஒப்பந்தங்கள் வரவிருக்கின்றன.

நாங்கள் எல்லோருடனும் வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்யப் போவதில்லை. ஆனால், நாங்கள் சில நாடுகளுடன் ஒப்பந்தங்களைச் செய்து கொள்கிறோம். ஒருவேளை இந்தியாவுடன் மிகப் பெரிய வர்த்தகம் மேற்கொள்ளப்படலாம்.

நாங்கள் அனைத்து நாட்டுடனும் ஒப்பந்தம் செய்து கொள்ளப் போவதில்லை. சில நாடுகளுக்கு ஒரு கடிதம் அனுப்பி, மிக்க நன்றி என்றுகூறி, 25, 35, 45 சதவிகிதம் செலுத்த வேண்டும் என்று கூறுவோம். அவர்களிடம் கண்டிப்பாக இருப்போம். அதுதான் சுலபமான வழி. அனைவரிடமும் விட்டுக்கொடுத்துச் செல்ல முடியாது.

சீனாவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளவிருக்கிறோம். உண்மையிலேயே இது நம்பமுடியாத விஷயம்தான். இருந்தாலும், ஒவ்வொரு நாட்டுடனும் உறவு மிகவும் நன்றாக உள்ளது” என்றார்.

சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து அதிபர் டிரம்ப் தெளிவாக எதுவும் கூறவில்லை என்றால், பூமியில் அரிதாக கிடைக்கக்கூடிய தனிமங்களில் வர்த்தகம் செய்யப் போவதாக வெள்ளை மாளிகை தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.